ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார்.?
அதிமுக
கோவை அரசியல் களத்தில் செந்தில் பாலாஜி மற்றும் எஸ்.பி. வேலுமணி இடையே நிலவும் நேரடி மோதல் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாம்..
கோவையை மீண்டும் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகங்களும், அதற்கு வேலுமணி அளித்துள்ள ரகசிய ரிப்போர்ட்டும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கள நிலவரத்தில் திமுகவின் அசுர வேகத்தைக் கண்டு அதிமுக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக நமக்கு பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன..
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக செந்தில்பாலாஜி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் இந்த முறை கைப்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் கரூரிலிருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தார் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜி - கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆல்டைம் கோட்டையாகவே இருந்து வருகிறது கோவை....இதன் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்து வருகிறார்.
அதிமுகவின் கோட்டையை தகர்க்க வேண்டுமென்பதற்காக, செந்தில்பாலாஜியிடம் ஸ்டாலின் அசைன் மெண்ட் கொடுத்திருப்பதால் இது அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு சற்று கிலியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவிலேயே பேசப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு எஸ்.பி.வேலுமணியை தொடர்புகொண்டு, கிட்டத் தட்ட 2 மணி நேரம் விவாதித்தாராம் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, கொங்கு மண்டலத்தில் நிலவரம் எப்படி இருக்கிறது? குறிப்பாக, கோவையிலுள்ள 10 தொகுதிகளின் நிலவரம் என்ன ? செந்தில்பாலாஜியின் ஆக்டிவிட்டி எந்தளவுக்கு இருக்கிறது ? என்றெல்லாம் வேலுமணியிடம் எடப்பாடி பழனிசாமி விசாரித்ததாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடியின் கேள்விகளுக்கு பதில் சொன்ன எஸ்.பி.வேலுமணி, ''கரூரில் போட்டியிட்டால் கோவையையும் கவனிக்க முடியாது என்பதால்தான் செந்தில் பாலாஜியை இங்கு இறக்கியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், எத்தனை செந்தில் பாலாஜி வந்தாலும் ஊதி தள்ளிவிடலாம்.
அவரது பொலிட்டிக்கல் பேட்டர்ன் என்னன்னு எனக்குத் தெரியும். கரூரில் நடத்தியது மாதிரி கோவையில் அவரால நடத்த முடியாது. அவரையும் தாண்டி நான் சில வியூகங்களை வகுத்து வைத்திருக்கிறேன். அதை அவரால் முறியடிக்கமுடியாது. கட்சியின் எச்சரிக்கையையும் தாண்டி தனிப்பட்ட முறையில் அவரா? நானா? என்கிற போட்டியை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.
அதனால்,திமுகவும் செந்தில்பாலாஜியும் எதிர்பார்ப்பது நடக்காது. நீங்கள் டென்சன் ஆகாமல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துங்கள். மீண்டும் கோவை அதிமுகவின் கோட்டை தான்'' என்றெல்லாம் தெம்பூட்டினாராம்.
வேலுமணி எடுத்த ஸ்பீடு
ஆனால், கோவை அதிமுக நிர்வாகிகளை வேலைவாங்கும்போது அவர்களிடம் பேசும் வேலுமணி, ''செந்தில்பாலாஜி நமக்கு ஒரு பொருட்டே இல்லைன்னு தலைவர் கிட்ட (எடப்பாடி) சொல்லிட்டேன். ஆனா, ஃபீல்டுல இறங்கும்போதுதான் நமக்கு தலை சுத்துது. நாம ஒரு அடி முன்னால இருக்கிற மாதிரி தோணூச்சுன்னா, திமுக 8 அடி முன்னால நிக்குது. அதனால செந்தில் பாலாஜியை தோற்கடிக்கணும்னா இன்னும் சீரியஷா வேலை பாருங்க'' என்று சொல்லி வருகிறாராம்.
இது ஒருபுறம் இருக்க,கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் செந்தில் பாலாஜியின் சிபாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறாராம் ஸ்டாலின்.
இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாரம்பரிய திமுகவினரிடம் அதிர்ப்தி இருப்பதாக வேலுமணிக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிருப்தியிலுள்ள திமுகவினரை வளைத்துப் பிடிக்க பெரிய பட்ஜெட்டில் திட்டமிட்டு தனது ஆட்களையும் இறக்கியிருக்கிறாராம் எஸ்.பி. வேலுமணி..!!!
