ஓசூர் ஸ்ரீ அழகன் முருகன் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா.!
கிருஷ்ணகிரி
ஓசூர் ஸ்ரீ அழகன் முருகன் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா : முருகன் திருமேனி மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர், பக்தர்கள் பரவசம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மலை குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் இன்று முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதனை ஒட்டி பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடனாக காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து வழிபாடு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அழகன் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மூல மந்திர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது இந்த கோயிலில் எப்போதும் இல்லாத அளவில் சூரிய ஒளி கதிர்கள் ஸ்ரீ அழகன் முருகனின் திருமேனி மீது விழுந்துள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் மெய் சிலிர்த்து பரவசம் அடைந்துள்ளனர். அதனைப் பார்த்து அரோகரா அரோகரா என பக்தர்கள் முருகனை வேண்டி வழிபாடு நடத்தினர்.
முதலாம் ஆண்டாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகனை வழிபாடு நடத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
