மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்."
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து, சிறப்பு தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்களின் தொல்லையால் மூத்த குடிமக்கள் நாய்கடிக்கு பலியாகி வருகின்றனர். ஆகையால் சாலையில் சுற்றி வரும் நாய்களை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள் உள்ளிட்ட அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
