ஏ.ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. !

கிருஷ்ணகிரி

ஏ.ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. !

கிருஷ்ணகிரியில் சுமார் 40 ஆண்டு காலமாக பிரபலமாக இயங்கி வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவ நிறுவனமான ஏ.ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதா நவாப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பரிதா நவாப்பிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

மேலும் நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ