குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தைப் பூசத் திருவிழானை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஶ்ரீ முருகன் திருக் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே செட்டிமாரம்பட்டி, கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் திருக்கோவிலில் 2-ம் ஆண்டு தைப்பூச தேர்திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள் குமரகிரி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், நேர்த்திக் கடனும் செலுத்தியும் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமிக்கு சந்தனக்காப்பு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சுவாமியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மேலும் தைப்பூச திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் முன்னாள் மிட்டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் எல். சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அன்னதானங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செட்டிமாரம்பட்டி கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
