ஓசூர் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்.!

கிருஷ்ணகிரி

ஓசூர் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்.!

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தட்சிண திருப்பதி என்று அழைக்கப்படும் கோபசந்திரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் இன்று மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் விமர்சியாக நடைபெற்றது. 

முன்னதாக திருக்கோவிலில் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று மங்கள ஆரத்தி, தீப ஆரத்திகள் நடைபெற்றன. அதேபோல திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கும் துளசி மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

பின்னர், பக்தர்களுக்கு துளசி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு சடாரி சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளையும் ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ