பித்தளைப்பட்டி- ஸ்ரீ அபித குஜாம்பிகை உண்ணாமுலை உடனுறை அண்ணா மலையார் கோவிலில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் விழா
பித்தளைப்பட்டி- ஸ்ரீ அபித குஜாம்பிகை உண்ணாமுலை உடனுறை அண்ணா மலையார் கோவிலில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் விழா சிவாச்சியர் பாலாஜி குருக்கள் தலைமையில் நடைபெற்றது
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது.
இதில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை 4;30 மணி அளவில் நடைபெற்றது.இந்த நிகழ்வு ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலை தவிர அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறும்.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பித்தளைப்பட்டி ஊராட்சி ஸ்ரீ அபித குஜாம்பிகை உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் விழா சிவாச்சாரியார் பாலாஜி குருக்கள் தலைமையில் நடைபெற்றது இதில் திரலாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல் நாள் யாகசாலை பூஜையுடன் துவங்கிய இந்த விழா ஆறாம் நாள் சூரனை வதம் செய்யும் நிகழ்வாகவும் ,ஏழாம் நாள் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இந்த நிகழ்வைக் காண பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, ஆரிய நல்லூர்,பஞ்சம் பட்டி,அனுமந்தராயன்கோட்டை,குட்டியபட்டி மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பால், பழங்கள், மாங்கல்யம் மற்றும் இதர பிரசாதங்கள் ஸ்ரீ பாலாஜி குருக்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
அழகர் சாமி