கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நவராத்திரி நிறைவு.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நவராத்திரி நிறைவு.!

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நவராத்திரி நிறைவு. 2 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய தேர் ஊர்வலம் 3 ஆம் தேதி காலை காந்தி சாலையில் முடிவுற்றது. 

இந்த தேர் ஊர்வலத்தில்....
1.சோமேஸ்வரர்  கோயில், 2.கவிஈஸ்வரன் கோயில், 3. லட்சுமிநரசிம்மர் கோயில், 4.மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில், 5. துர்கா தேவி, 6. காட்டினாயனபள்ளை முருகர் கோயில், 7. கொசமேடு விநாயகர் கோயில், 8. கிருஷ்ணன் கோயில், 9. காமாட்சி அம்மன் கோயில், 10. முத்து மாரியம்மன் கோயில், 11. ராமர் கோயில் , 12. பட்டாளம்மன் கோயில் ,13. படவேட்டம்மன் கோயில், 14 கல்கத்தா காளி கோவில், 15. மேல்தெரு மாரியம்மன் கோவில்,16. ராமானுஜர் ஆகிய 16  கோவில்களின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அணிவகுத்து நின்று அருள்பாளித்தன.  

பின்னர் தேர்களுக்கு முன்பாக வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சியில் மராத்திய ராஜ வம்சத்தை சேர்ந்த ஒருவர் போர் வாளால் வன்னி மரத்தை வெட்டுகிறார்.  வெட்டப்பட்ட வன்னிமரத்து இலையை பக்தர்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

பின்  சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய, ஏராளமாக கூடியிருந்த  பக்தர்கள் வழிபட்டனர்.

தேரோட்ட நிகழ்விலும், அணிவகுப்பு சிறப்பு பூஜையிலும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு பாலாஜி, தமிழ்ச்செல்வன் இருவரும்  கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ