கரிசல் குடியிருப்பு மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு .!

தென்காசி

கரிசல் குடியிருப்பு மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு .!

கரிசல் குடியிருப்பு மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு 

தென்காசி செப்-24


நவராத்திரி விழா நேற்று  தொடங்கிய நிலையில் அனைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் பக்தர்கள் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர். 

வரும் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ஆம் தேதி விஜயதசமி பூஜையோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.

அந்த வகையில், விழா தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று  செவ்வாய் கிழமை தொடங்கியது நவராத்திரி திருவிழாவான ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார்.

இந்தநிலையில், விழாவை முன்னிட்டு கோயிலில் நவராத்திரி கொலு படிகள் ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  

குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள்,  துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் மாகாளியம்மன் வைத்து வழிபடுகின்றனர். மேலும் சமத்துவத்தை குறிக்கும் வகையில் சுவாமி விவேகானந்தர் அன்னைதெரசா அப்துல்கலாம் ஆகியோரின் உருவ பொம்மைகளும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரிசையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாகவி பாரதியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவ பொம்மைகளும் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று  இரவு அம்மனுக்கும், கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மன் மாகாளியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்

AGM கணேசன்