அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 10001 திருவிளக்கு பூஜை
ஆண்மீகம்

பித்தளைப்பட்டி- அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 10001 திருவிளக்கு பூஜை மற்றும் ஐயப்ப பக்தர்களின் 15 வது ஆண்டு பூக்குழி இறங்கும் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பித்தளைப்பட்டி ஊராட்சி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் முன்பாக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பக்தர்கள் (10001 )பத்தாயிரத்து ஒன்று திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர்.
இதில் கார்த்திகை மாதத்தில் பெரிய கார்த்திகை திருநாள் முடிந்து ஒரு வாரம் கழித்து இந்த விழாவானது ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
விழாவில் பக்தர்கள் தாங்கள் விரதம் இருந்து ஸ்ரீ காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.அதேபோல் இதே மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீ சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தினசரி சக்தி பூஜை நடத்துவதும் அதே நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்குவதும் வளக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் தாங்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்னர் ஸ்ரீ காளியம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கோவில் முன்பாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை வெறும் காலில் இறங்கி நடந்து வந்து ஸ்ரீ காளியம்மனை வேண்டி சென்றனர்.சிறப்பு அழைப்பாளராக பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், முன்னாள் கூட்டரவு சங்கத்தலைவர் நடராஜன் ,திமுக பிரமுகர் அருண்,குருசாமிகள் ஆறுமுகம், கிருஷ்ணன், சண்முகம், பொன்ராம், தலைமை தாங்கினார்.
விழாவின் இறுதியில் அம்மன் வேடமடைந்து நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சியளிப்பது போல் விழா நிறைவு பெற்றது.
மேலும் இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
அழகர் சாமி