குவைத் ஸ்டார் ஆப் தமிழன் 142 ஆவது மனிதநேய உறவுகள் பயணம்.!
குவைத்
குவைத் ஸ்டார் ஆப் தமிழன் 142 ஆவது மனிதநேய உறவுகள் பயணம்.!
குவைத் நாட்டில் பணி செய்யக் கூடிய நண்பர்கள் ஒன்றிணைந்து கடந்த பல வருடங்களாக பொது சேவை மற்றும் ஏழை, எளியோருக்கு உதவுதல், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என அறிந்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் வழங்குவது என பல சேவைகளை செய்து வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் தொண்டுள்ளம் கொண்ட நபர்களும் இணைந்து தங்களது இல்ல விசேஷங்களை முதியோர் இல்லம், அனாதை இல்லம் என தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள், மருத்துவ சேவைகள் என செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று 142 ஆவது நிகழ்வாக ராஜு பழனி இல்லத்தாரின் பிறந்த நாளில் முதியோர் இல்லத்தில் 3 வேளையும் உணவளித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நியூஸ் டுடே செய்தி குழுமம் சார்பாக பல்லாண்டு கால வாழ்ந்து இது போன்ற பொது சேவைகள் செய்து ஏழை, எளியோரை காத்திட இறைவன் அருள் புரிவானாக.!
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR:)