தர்மபுரியில் கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா தலைவர் பி.சி.சேகர் தலைமையில் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
தர்மபுரியில் கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா தலைவர் பி.சி.சேகர் தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரியில் கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா தலைவர் பி.சி.சேகர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கௌரவத் தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் மகளிர் அணி தலைவி திருமதி கலைவாணி, இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
மேலும், இந்த மகளீர் தின விழாவில் பெரியாம்பட்டியை
சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இளைஞர் அணி துணை செயலாளர் மணிவண்ணன் பாலக்கோடு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 45 பேருக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் நமது கற்போம் கற்பிப்போம் அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து மகளிர்களுக்கும் தலைவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவருமான
பி.சி.சேகர், கௌரவத் தலைவர் மற்றும் ரங்கராஜ் ஆகியோரும் பரிசுப் பொருட்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.
விழாவில் மைய நிர்வாகிகளான பாரதி, கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சாமிநாதன், பாலக்கோடு குமரேசன், கருணாநிதி ஆகியோர் உள்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னாதாக மைய நிர்வாகி முருகன் வரவேற்று பேசினார்.
முடிவில் மைய இளைஞரணி செயலாளர் மகேந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
