ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த பள்ளி ஆண்டு விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த பள்ளி ஆண்டு விழாவினை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் துவக்கிவைத்து சிறப்பித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பள்ளியின் 15-ம் ஆண்டு விழா, புதிய மாணவர்கள் சேர்க்கை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி தலைமையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பழனிச்சாமி, சீனிவாசன், வசந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயசங்கர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளியின் புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, கல்வி கற்றால் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் கல்வியின் அவசியத்தை உணர்ந்து படித்தல் உலகம் உங்கள் கையில் என்பதை புரிந்து படிக்கும் பழச்சத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் இந்த விழாவினைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவினை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் குழந்தைகளின் கண்கவரும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
.
