இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் , விட்டுமனை பட்டா வழங்கும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் 188 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் , திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் மற்றும் சமூகநலத்துறை சார்பில், 95 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் , விட்டுமனை பட்டா வழங்கும் விழா.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்,MLA, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய/நகர/பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...
செய்தியாளர்
மாருதி மனோ
