பாமக நிறுவனர் ராமதாஸ் அணியின் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!
பா.ம.க.
கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவினைக் கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் அணியின் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முனிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மேகநாதன், பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பி. சி.ரவி மற்றும் மாநில கொள்கை விளக்கு அமைப்பு துணை செயலாளர் எடப்பாடி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமுதாயத்திற்க்குமான சாதிவாரி கணக்கெடுப்பு, அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடந்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முனிராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் போராடி பெற்ற
வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீட்டை நிறைவேற்றப்பட வேண்டும், அனைத்து சமுதாயத்திற்க்குமான சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
அப்போது மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோ.கிருஷ்ணன், ஒசூர் மாநகர செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
