கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில், UPSC மற்றும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான நூல்களை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, பையூர் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் தளி டிப்ளமோ தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில், UPSC மற்றும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான நூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், பையூர் அரசு தோட்டக்கலை கல்லூரி முதல்வர் அனிசா ராணி, தளி தோட்டக்கலை கல்லூரி துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் முனைவர். கிருஷ்ணவேணி, வேளாண் அலுவலர் அருள்தாஸ், தனி வட்டாட்சியர் சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
