காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு சட்டத்தை சிதைக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தியால் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட 300 க்கு மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு சட்டத்தை சிதைக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

அப்போது உரையாற்றிய அவர் .....
நாட்டில் பட்டினியால் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் 2005-ம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஆட்சியின் போது அன்னை சோனியா காந்தியால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களின் பசியை போக்கிய இந்த உன்னதமான இந்த திட்டத்தினை சிதைக்கும் விதமாக காந்தியின் பெயரை நீக்கியதோடு நூறு நாள் வேலைத் திட்டத்தினை அடியோடு அழித்திடும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு மகாத்மா காந்தியின் பெயரை எக்காரணம் கொண்டும் நீக்க அனுமதிக்க முடியாது என கண்டன உரை ஆற்றினார்.
மேலும் மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. இரகு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டதின் போது கிராம கமிட்டி பொறுப்பாளர் அக. கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரவர்மா, ஆறுமுகம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ராஜா குமாரவேல், ஜோசுதுரை, நாரயண மூர்த்தி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், முன்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, மாவட்ட பொருளாளர் உமர், சேலம் ரயில்வே கோட்ட உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்து நூறு நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசின் அடக்கு முறையை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வினாயகம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்களான வின்சென்ட், முபாரக் சிறுபாண்மை பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவர் முனீர், தொகுதி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், நகர தலைவர்கள் யுவராஜ், ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
.
