பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி மார்பில் உலக்கையால் மஞ்சல் இடித்து பக்தர்களுக்கு பிரசாதம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி மார்பில் உலக்கையால் மஞ்சல் இடித்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கரகோசத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தின் மலை அடிவாரத்தில்
எழுந்தளியுள்ள ஸ்ரீ பாலமுருகர் திருக்கோவிலில், 8ம்-ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கொடியோற்றத்துடன் துவங்கி பல்வேறு கட்ட பூஜைகளுடன் நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மார்பில் உரல் வைத்து, உலக்கை கொண்டு மஞ்சள் இடிக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது பரண்மேல் பக்தர்களை படுக்கவைத்து மார்பின்மீது உரல் வைத்து, உலக்கை கொண்டு மஞ்சல் இடிக்கப்பட்டது. பின்னர், இடிக்கப்பட்ட மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 40 அடி உயரத்தில் பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்தபடி ஸ்ரீ பால குமாரனுக்கு மாலை அணிவித்து, கற்பூர தீபாதரணையும் காண்பிக்கப்பட்டது, அப்போது பக்தர்கள் முருகனுக்கும், கந்தனுக்கும் அரோகரா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு, முருகனை வழிபட்டனர்.
இந்த ஆடி கிருத்திகை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால முருகனை தரிசனம் செய்துவழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ