தீவிர வாக்குசாவடி மையம் மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குசாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டார்..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் தீவிர வாக்குசாவடி மையம் மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குசாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1-1-2026 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மற்றும் வாக்கு சாவடி மறு சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் மற்றும் வாக்குசாவடி பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டார்
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்தக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையங்களில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடி மையங்களை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தின் போது வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. ஆகையால் வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் பெயர்களை சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தசாமி, திமுக வட்ட பிரதிநிதி ஜெய்சன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகர தலைவர் லலித் ஆண்டனி, ரகு, அதிமுக நகர துணை செயலாளர் குரு, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆலப்பட்டி ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜேந்திரன், கார்த்தீக், முருகேசன் உள்ளிட்ட அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ