ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கிருஷ்ணகிரி ஆணழகன் போட்டி :!

ஒசூர்

ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கிருஷ்ணகிரி ஆணழகன் போட்டி :!

ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கிருஷ்ணகிரி ஆணழகன் போட்டி :  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கிருஷ்ணகிரி ஆணழகன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர் .

அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆணழகன் போட்டி ஓசூரை அடுத்த மத்திகிரி  கிங்மேக்கர் பிட்னஸ் ஜிம் சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவு,  60 கிலோ எடை பிரிவு, 75 கிலோ எடை பிரிவு ஆகிய 6 பிரிவுகளில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் உடல் திறனை காண்பித்து பார்வையாளர்களை
வெகுவாக கவர்ந்தனர்.

இந்த போட்டியில் கிருஷ்ணகிரி ராம்ராஜ் என்கிற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆணழகன் ஆக  தேர்ந்தெடுக்கப்பட்டார். மிஸ்டர் கிருஷ்ணகிரி ஆணழகன் போட்டிக்கான ஏற்பாடுகளை மத்தகிரி கிங்மேக்கர் பிட்னஸ் ஜிம் குழுவினர் ஆல்பர்ட் ஜோஸ்வா அன்புராஜ் பிரான்சிஸ் ஆகியோர் முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக  முன்னாள் அமைச்சர்,அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் மாமன்ற உறுப்பினர் மஞ்சுநாத், சிட்டி ஜெகதீஷ். வாசுதேவன். ராமு, ஹரிஷ் ரெட்டி, கும்மி என்கிற ஹேமகுமார், ராஜு உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு ஆணழகன் போட்டியில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திய இளைஞர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு  நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த ஆணழகன் போட்டி நடைபெற்றதை கண்டு களித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ