பர்கூர் அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நாட்டுநல பணித் திட்ட முகாம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே நடைபெற்ற நாட்டு நலப்பணிகள் திட்ட முகாமில் கலந்துக் கொண்ட சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு நுகர்வோர் வாங்கும் பொருள்கள் மீது ஏதும் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதி மன்றத்தினை நாடலாம் என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நாட்டுநல பணித் திட்ட முகாம் கடந்த 12-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக மிட்டப்பள்ளி கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டு நுகர்வோர் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்,
அப்போது பிறக்கும் குழந்தைகள் முதல் இந்திய ஜானாதிபதி வரை அனைவரும் நுகர்வோர்தான். ஆகையால் எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும் அந்தப் பொருள் தரமற்றதாக இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுகி அதற்கான தீர்வுக் காணலாம் என்று குறிப்பிட்டார். இதன் முன்னதாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இந்த முகாமில், நுகர்வோர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெய்சன், அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் திட்ட அலுவர்களான சந்தோஷ், பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
