கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி கூட்டத்தின் போது ரவுண்டானா அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் திரு உருவப் படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் கலந்துகொண்டு செல்வி ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
மேலும் இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜன், முனிவெங்கடப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், நகர துணைச் செயலாளர் குரு மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த சரவணன், தாபா வெங்கட்ராமன் கார்த்திக், வெங்கடாசலம், செந்தில், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு செல்வி ஜெயலலிதா அவர்களின் திரு உவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்,
இதே போல் கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்திலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
