கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய 6 வகுப்பறை கட்டிட திறப்பு விழா .!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய 6 வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பள்ளி மாணவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் பள்ளி நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழகத் தோழர்கள், வட்ட செயலாளர், வட்ட பிரதநிதிகள், என அனைவரும் பள்ளி வளாக திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
