கடந்த 4 ஆண்டுகளாக மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மா மரங்களில் பூத்துள்ள மாம்பூக்களை அடித்து உதிர்த்து வரும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஆத்திரம்.!

கிருஷ்ணகிரி

கடந்த 4 ஆண்டுகளாக மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மா மரங்களில் பூத்துள்ள மாம்பூக்களை அடித்து உதிர்த்து வரும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஆத்திரம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கடந்த 4 ஆண்டுகளாக மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மா மரங்களில் பூத்துள்ள மாம்பூக்களை அடித்து உதிர்த்து வரும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஆத்திரம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பாளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் சுவை மிகுத்த மல்கோவா, நிலம், செந்தூரா, மீத்தர் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கால நிலை மாற்றம் காரணமாக முன்கூட்டியே மாமரங்களில் பூக்கள் பூக்கத்துவங்கியுள்ளன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாமரங்களில் அதிக அளவிலான பூக்கள் பூத்துள்ளது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், உரிய விலையும் நிர்ணயம் செய்யாததால் மாங்காங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தால், அறுவடை கூலி கூட கொடுக்க முடியாமல் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டை போல இட்டிக்கல் அகரம், தவளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மா விவசாயிகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாமரங்களில் மாம்பூக்கள் அதிக அளவில் பூத்துள்ளதை கண்ட விவசாயிகள் மா மாமரத்தில் உள்ள மாம்பூக்களை அடித்து உதிர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய மா விவசாயியான அனுமந்தராசு...... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக  மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க வில்லை
மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாங்காய்களுக்கு உரிய விலை இல்லை. ஆகையால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மா மரங்களில் அதிக அளவில் மா பூக்கள் பூத்துள்ளது. இதனால் மா விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் உரிய விலை கிடைக்காது என்பதால் விரக்தியில் மாமரத்தில் உள்ள மா பூக்களை அடித்து உதிர்த்து வருவதாக தெரிவித்தனர். மேலும் மாம் பூக்களை அடித்து உதிர்த்து மறுகாப்பு சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருவதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ