கடந்த 4 ஆண்டுகளில் 40% மதுபாட்டில்கள் பில் இல்லாமல் கோபாலபுரம் குடும்பத்தினரால் 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என முன்னால் எம்.எல்.ஏ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு. !
கிருஷ்ணகிரி

கடந்த 4 ஆண்டுகளில் 40% மதுபாட்டில்கள் பில் இல்லாமல் கோபாலபுரம் குடும்பத்தினரால் 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது, ஒசூரில் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் V.பன்னீர்செல்வம் பொறுப்பாளராக அதிமுக பொதுசெயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய.மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவின் அமைப்பு ரீதியான ஒன்றியங்கள் வாரியாக பூத் கமிட்டி அமைக்க ஆலோசனைகளை மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் வழங்கி இருந்தநிலையில்
அதிமுகவினரால் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை ஒன்றியம் வாரியாக பன்னீர்செல்வம் நேரடியாக சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகலூரில் ஒசூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பில், 27 பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தினை ஒசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அப்போது உரையாற்றிய பொறுப்பாளர் V.பன்னீர்செல்வம்:
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவால் தாலிக்கு தங்கம் வழங்கி நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
திருமணத்திற்கு கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்கள் வளைகாப்பு செய்ய முடியாத சூழலில் அவர்களுக்கு வளைகாப்பு செய்து அழகு பார்த்தவர் அம்மா, அத்துடன் 18,000 ரூபாயுடன் சீதனமாக பரிசு பெட்டகம் வழங்கினார்.
அத்துடன் குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்லும்போது முதல் பள்ளி படிப்பை முடிக்கிற வரை 16 வகையான விலையில்லா பொருட்களை வழங்கி படிக்க வைத்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா.
பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுவதை மட்டும் பார்க்க வேண்டாம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எத்தனையோ திட்டங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
விஞ்ஞானி கல்வி பயில சைக்கிள், இலவச மடிக்கணினி வழங்கினார், ஆனால் இந்த திட்டங்கள் இப்போது இல்லை, மாதம் 1000 வழங்கினால் ஆண்டிற்கு 12,000 ரூபாய் தான், ஆனால் ஒரு வீட்டிற்கு அதிமுக ஆட்சி காலத்தில் கிடைத்த 1 லட்சம் ரூபாயிலான திட்டங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
10000 பெரிதா? 1 லட்சம் பெரிதா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் 50% இருசக்கர வாகனம் வாங்க நிதி வழங்கப்படும் என தெரிவித்து நம்மைவிட்டு பிரிந்து சென்றார்.அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதி மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான். ஜெயலலிதா கொண்டு வந்த அத்துனை திட்டங்களையும் 2021 வரை செயல்படுத்தியவர் எடப்பாடியார்..
மருத்துவ படிப்பு கனவாக இருந்த அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீடு ஒதுக்கி ஆண்டுதோறும் 4500 மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க சட்டமியற்றியவர் எடப்பாடியார்
கடந்த 2 தினங்களுக்கு மது ஆலையிலிருந்து 60% மதுபாட்டில்கள் தான் நேரடியாக மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.. மீதம் 40% மதுபாட்டில்கள் கோபாலபுரம் இல்லத்தினரால் முறைகேடு செய்து கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றார்
ஓசூர் வடக்கு ஒன்றிய கமிட்டி பொறுப்பாளர்கள் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் மதன்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்பி இளஞ்சூரியன், தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் ஒன்றிய குழு முன்னால் தலைவர் சசி வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, உன்னால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனிவாச ரெட்டி,கழக நிர்வாகி கார்த்தி, ஒன்றிய கழகம் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ