சுண்டம்பட்டி, புனித அந்தோணியார் திருத்தலத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா.!

கிருஷ்ணகிரி

சுண்டம்பட்டி, புனித அந்தோணியார் திருத்தலத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா.!

சுண்டம்பட்டி, புனித அந்தோணியார் திருத்தலத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பு.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் பண்டிகை சாதி, மத, வேறுபாடுகள் இன்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த சமுத்துவ பொங்கல் விழாவிற்கு புனித அந்தோனியார் திருத்தல பங்கு தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புது மண்பானையில் பச்சரிசி, வெல்லம் கொண்டு பொங்கலிடப்பட்டது.

பின்னர் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட தோரணங்கள் கட்டி தங்களது நன்றியினைத் தெரிவித்து வழிபட்டனர்.

இத்த சமத்துவ பொங்கல் விழாவில் சுண்டம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு உட்பட்ட பகுதியை சேந்த மக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ