கிருஷ்ணகிரி அருகே புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை .!

கிருஷ்ணகிரி அருகே புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து குவிந்த வியாபாரிகள், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி.

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கிராமத்தில் வாரந்தோறும் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வாணியம்பாடி தர்மபுரி போன்ற இடங்களில் இருந்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் விற்பனைக்காக ஆடுகளை அழைத்து வருகின்றனர்.

ஆடுகளை வாங்க கர்நாடகா ஆந்திரா மற்றும் சேலம் ஈரோடு கோவை கடலூர் விழுப்புரம் வேலூர் சென்னை போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். 

இதனிடையே தீபாவளி பண்டிகை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தை களைக்கட்டி உள்ளது. காலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியுள்ளது. ஆடுகளை வாங்க தமிழகம் கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து சுமார் 50,000 பேர் குவிந்துள்ளனர். விறுவிறுப்பாக ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது. 

வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு  ரூ.8 ஆயிரமும், கிடா ஆடு ₹ 10 ஆயிரம் முதல் விற்பனை ஆகும் தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் விலை அதிகரித்து ₹ 10 முதல் ₹ 12 ஆயிரம் வரையில் பெண் ஆடும், ₹ 12 ஆயிரம்க், ₹ 15 ஆயிரம் வரையில் கிடா ஆடும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு ஆடு 30 ஆயிரம் வரை விற்பனையாகிறது. 

விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானாலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வியாபாரிகளும் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர்.

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக அழைத்துவரப்பட்டுள்ளது. இன்று மட்டும் ₹ 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என்று வியாபாரி முபாரக் தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ