சிகரம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் சார்பில் ஹேப்பி ஹோம்ஸ்-ன் பயனாளிகள் நலத்திட்ட விளக்க உரை நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

சிகரம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் சார்பில் ஹேப்பி ஹோம்ஸ்-ன் பயனாளிகள் நலத்திட்ட விளக்க உரை நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரியில் சிகரம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் சார்பில் ஹேப்பி ஹோம்ஸ்-ன் பயனாளிகள் நலத்திட்ட விளக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிகரம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் சார்பில் ஹேப்பி ஹோம்ஸ்-ன் பயனாளிகள் நலத்திட்ட விளக்க உரை நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஹேப்பி ஹோம்ஸ் நிறுவனர் ஏ.கே.அருண்பால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நலத்திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் இந்த நலத்திட்டங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பைய நாயகர்கள் ஒவ்வொருவரும் மாதம் 5 கிலோ அரிசியில் சில மளிகை பொருட்களும் இலவசமாக பெறுவது, பயனாளிகளின் பெண் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பது, பயனாளிகளுக்கு சொந்தமாக இடம் இருந்தால் 650 சதுர அடியில் இலவசமாக வீடு கட்டி தருவது, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு, பயனாளிகளின் குடும்பத்தை தத்து எடுத்து 15 வருடம் நிறைவு பெறும்போது மானியமாக 10 லட்சத்து 80 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட எண்ணற்ற பயனாளிகளின் இலவச நலத்திட்டம் குறித்து நீண்ட விளக்க உரையாற்றினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹேப்பி ஹோம்ஸ் குறித்த எண்ணற்ற திட்டங்களை வழங்கி வெகுவாக பாராட்டி பேசினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை இளஞ்செழியன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர் சுரேஷ், நிறுவனத் தலைவர் கஜேந்திரன், இயக்குனர் வேதாச்சலம், திருப்பூர் செந்தில், சேலம் நேரு, கிருஷ்ணகிரியை சேர்ந்த ரகுநாதன், குமார், நரேஷ், குமார், ரவிக்குமார், நர்லேஸ், ரஞ்சித், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ