சென்னை பள்ளிக்கரணையில் ஜெ. எல்.லட்சுமி தலைமையில் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் மாபெரும் பொதுக்கூட்டம்.!

சென்னை

சென்னை பள்ளிக்கரணையில் ஜெ. எல்.லட்சுமி தலைமையில் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் மாபெரும் பொதுக்கூட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!

தி.மு.க.வின் நிறைவேற்றாத, பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிட்டு வறுத்தெடுத்த பகுதி செயலாளர் லட்சுமி

சென்னை புறநகர் மாவட்ட கழகம் அ.தி.மு.க. சார்பில் மறைந்த  ஜெ. ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் பகுதிக் கழக செயலாளரும்  181வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜெ.எல். லட்சுமி தலைமை மற்றும் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி கந்தன் முன்னிலையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர் வி எஸ் சேதுராமன் கழக அமைப்புச் செயலாளர் கே சிங்காரம் கழக செய்தி தொடர்பாளர் எம் ஜமீலா ஆகியோர் பங்கேற்றனர்.


முன்னதாக வரவேற்புரையாற்றிய பகுதி செயலாளர் லட்சுமி  விடியா திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி இன்றைக்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

வரலாறு காணாத விலையேற்றம் மின்சார கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பதிவு துறையில் ஊழல் என எங்கும்  ஊழல் எதிலும் ஊழல் என   இந்த விடியா திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அதிமுக அரசின் கடந்த கால சாதனைகளை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொழுது மகளிருக்கு உதவி தொகை 2000, குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 10000, போன்றவற்றை எடுத்துரைத்து மீண்டும் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி உறுதி என பேசி புரட்சித் தலைவர் ஆட்சி மற்றும் புரட்சித்தலைவி ஆட்சியை போன்று இந்த விடியா திமுகவால் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

மகளிருக்கு பல்வேறு திட்டங்களை தி.மு.க.செய்திருந்தாலும் இந்த கூட்டத்தில் ஆண்களை விட பெண்கள்  திரளாக பங்கேற்றது அ.தி.மு.க வின்  பெண்கள் வாக்கு பலமாக இருப்பதாகவே காட்டியது.

இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் லியோ என் சுந்தரம், கழக பேச்சாளர் பு. மணவை மாறன், கழக இளம் பேச்சாளர் மதன்குமார் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வி. என் பி வெங்கட்ராமன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் சி மணிமாறன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி கோவிந்தசாமி,ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.இறுதியாக 190 வது மேற்கு வட்டக் கழக செயலாளரும்  மாமன்ற உறுப்பினருமான பி. சிவப்பிரகாசம் நன்றி உரையாற்றினார்.


செய்தியாளர்

  சுகுமாரன்