குப்பை லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது!
சென்னை
வேளச்சேரியில் குப்பை லாரி யூடர்ன் செய்யும் போது திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் கார் மோதி விபத்து, கார் ஓட்டுநர் காயம்.
சென்னை வேளச்சேரி அடுத்த தரமணி 100 அடி சாலை, டான்சி நகர் யூடர்ன் பகுதியில் சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் லாரி திரும்பிய போது, வேளச்சேரி நோக்கி வாகனங்கள் வந்ததால், திரும்பாமல் திடீரென குப்பை லாரியை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
இதனால் வேளச்சேரியில் இருந்து தரமணி ஐடி கம்பெனிக்கு ஆட்களை அழைத்து செல்ல சென்ற கார் குப்பை லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் ஓட்டுநர் இருசப்பன்(24), காயமடைந்தார். அவருக்கு கைகளில் கண்ணாடி குத்தி காயங்களும், கால் முட்டி பகுதியில் வீக்கம், மார்பில் உள்காயம் ஏற்பட்டது.
பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் குப்பை லாரி ஓட்டுநர் மணிகண்டனிடம்(35), விசாரணை செய்து வருகின்றனர்.
https://youtu.be/FPun5Y5Qi5s?si=1Xj57a86v-8td1yI
செய்தியாளர்
S S K