ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி .!

ராகுலுடன் உரையாடிய மோடி

ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி .!

டெல்லி: அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. ராகுல் காந்தியை பார்த்ததும், அவரை தேடிப்போய் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசிய சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.

சமூக சீர்த்திருத்தவாதியான ஜோதிராவ் பூலேவின் 200வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிராவ் பூலேவின் உருவச்சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி திரெள திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்திற்கு தனது காரில் வந்து இறங்கினார். அப்போது லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் ஜோதிராவ் பூலேவிற்கு மரியாதை செலுத்த நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் பிரதமர் மோடி அனைவருக்கும் வணக்கம் செலுத்தினார். பதிலுக்கு ராகுல் காந்தி உள்பட அனைவரும் வணக்கம் செலுத்தினர்.

இந்த சமயத்தில் மோடி அனைவருக்கும் வணக்கம் செலுத்தவிட்டு மீண்டும் திரும்பி சென்று ராகுல் காந்தியிடம் பேசினார். ராகுல் காந்தியும் கையசைத்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அரசியல் களத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படியான சூழலில் இன்று நடந்த இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.