அறப்போர் இயக்கத்தினர் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல -  நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்' என்னும் விழிப்புணர்வு பிரச்சா.!

கிருஷ்ணகிரி

அறப்போர் இயக்கத்தினர் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல -  நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்' என்னும் விழிப்புணர்வு பிரச்சா.!

கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை ரவுண்டானாவில் அறப்போர் இயக்கத்தினர் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல -  நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்' என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஜாய் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ரவுண்டானா வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகே உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மக்கள் அவர்கள் வாகனங்களிலும் கடைகளிலும் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல - நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்' எனும் ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

ஓட்டுக்கு பணம் வாங்குவதால் நம் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் இழப்புகளை பற்றியும் மக்களாகிய நாம் நேர்வழியில் நடப்பது குறித்தும் அறப்போர் இயக்கத்தினர் மக்களிடையே பேசி உரையாடினர். மேலும் வார்டு 29 மற்றும் 30 இல் உள்ள ஜோதி விநாயகர் கோயில் தெரு, ராசி வீதி, பானக்கார தெரு, வக்கீல் தெரு போன்ற வீதிகளில் மக்களுடன் உரையாடி ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று உறுதி எடுக்கக் கேட்டுக் கொண்டார்கள். உறுதி எடுப்பவர்கள் வீட்டின் வாசலில் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல -ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்' என்னும் ஸ்டிக்கரை  மக்கள் இன் முகத்தோடு ஒட்டினார்கள்.

மக்களின் மனமாற்றத்தை நோக்கி அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டில் 120க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் இதுபோன்ற தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார். வார்டு 29 மற்றும் 30 பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக பிரச்சாரம் நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஜாய் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், தன்னார்வலர்கள் அகத்தியர் பவுன்ராஜ், திலக், ராஜேஷ், நந்தகுமார், சிவா மற்றும் தன்னார்வ அமைப்புகளை சார்ந்தோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ