கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிப்பு.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது.
ஏற்கனவே திமுக, இந்தியா கம்யுனிஸ்ட் கட்சிக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமாரும், ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதிக்கு குப்புசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரியில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமையில், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை எந்த துரைசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், பர்கூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், மாவட்ட செயலாளர் ஹரி ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா மற்றும் பழையபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்,
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது சிறுபாண்மை பிரிவு மாவட்டத் தலைவர் முனீர் அகமத் மாவட்ட பொதுச்செயலாளர் கமால்கான், காங்கிரஸ் கட்சியைசேர்ந்த ஜெயபிரகாஷ், கமலக்கண்ணன், சக்கரவர்த்தி, பாண்டுரங்கன், நெடுங்கல் சுப்ரமணி, வழக்கறிஞர் குலாம்நபி ஆசாத், இப்ராகிம், சல்மான் , மன்சூர், வெங்கடாசலம், தனபால், முனவர் பாஷா, சதாசிவம், சுந்தரேசன், சக்திவேல், அப்பு கவுண்டர், மொயின்கான் சபரிஷன், மதுரை செல்வம், மஞ்சுநாத், நஞ்சுண்டன், கராமத், ஜப்பார் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
