கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஆட்சியர் அலுவலகத்தில், மாதாந்திர எரிவாயு உருளை கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஆட்சியர் அலுவலகத்தில், மாதாந்திர எரிவாயு உருளை கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஆட்சியர் அலுவலகத்தில், மாதாந்திர எரிவாயு உருளை கூட்டம் 31-10-2025 மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  

மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.கீதாராணி DSO. அவர்கள் தலைமையில், மற்றும் அவரது நேர்முக உதவியாளர் மோகன் முன்னிலையில், இண்டேன் கேஸ் சேலம் மண்டல மேலாளர் ரெய்டான் SALES MANAGER நுகர்வோர் அமைப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாரத் கேஸ், இன்டேன் கேஸ்,  எச்பி கேஸ் என கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு உருளை முகவர்கள் கலந்து கொண்டனர்.

இன்னிகழ்வில்  நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏஜி.ஜாய் அவர்கள் பேசுகையில்.....

நுகர்வோருடைய பிரச்சனைகளாக, டெலிவரி ஆட்கள் குறிப்பிட்ட சீருடை அணிந்து வருவதும், பணி நேரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து டெலிவரி செய்யவும், குறிப்பிட்ட எடையுடன் பில் தொகை கொண்ட டெலிவரி மட்டுமே பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். 

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எரிவாயு கொண்ட அடுப்புகளை வீடுகளில் பராமரிக்கவும், அதற்குரிய தொகையை பெற்று சிறப்பான பராமரிப்பு சேவைவழங்க வேண்டும் எனவும்,  வீடுதோறும் "எரிவாயு உருளை பயன்படுத்துவோம்!  அச்சத்தை தவிர்த்து" என எரிவாயு அடுப்புகள் சரியான பராமரிப்புடன் உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் ஐ. எஸ் .ஐ (ISI) முத்திரையில்லாத எரிவாயு உபகரணங்கள், உதிரி பாகங்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், நடவடிக்கை மேற்கொள்ளவும், திடீராய்வு கொண்டு அவற்றை பறிமுதல்செய்து, குறிப்பிட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும், எச்சரிக்கையும்,  நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

வருங்காலங்களில் தொடர்ச்சியாக, இதுபோல போலி ஐஎஸ்ஐ (duplicate without-ISI) இல்லாத விற்பனை இருக்குமானால், சிறை தண்டனையும்,  நடைமுறைப்படுத்தவும், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தில் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு நுகர்வோர் அமைப்பு சுரேஷ் குமார்,  திவாகர், நந்தகுமார் என பல பிரதிநிதிகள் தங்களுடைய வேண்டுதல்களையும், கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி கீதாராணி அவர்கள், உடனடியாக வருகிற நாட்கள் இதுபோல போலி உபகரணங்களை பயன்படுத்தக்கூடிய,  எரிவாயு உருளை உதிரி பாகங்கள், எரிவாயு உருளை உபகரணங்கள் போன்றவற்றை தடுத்து, விபத்தில்லாத,  பாதுகாப்பான பயன்பாட்டினை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

போலி உபகரணங்கள், போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய வணிக நிறுவனங்கள் திடீராய்வு செய்யப்பட்டு பறிமுதல் மற்றும் தண்டமும் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று,  எச்சரிக்கையுடன் கொண்ட நடவடிக்கையாக, அபராதமும், தண்டனை வழங்க வாய்ப்பு இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறி, எரிவாயு உருளை முகவர்களுக்கு நிரந்தர பணியாளர்கள் மூலம் ஒழுக்கமான  சீருடை மற்றும் விநியோகம் மற்றும் அறிவுரைடன் செயல்படுத்தவும், கேட்டுக்கொண்டார்.

இறுதியாக மாவட்ட வழங்கல் அலுவலர் நேர்முக உதவியாளர் மோகன் அவர்கள் வந்திருந்த அனைத்து தரப்பிலும், சிறப்பான ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் எரி உருளை வாயு முகவர்கள் அமைப்பு பிரதிநிதிகள் என அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நன்றி கூறி நிறைவுற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ