காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு. !
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மதியழகனுக்கு ஆதரவாக, தமிழக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இந்திய கூட்டணி கட்சியின் திமுக சார்பில் போட்டியிட்டுள்ள மதியழகன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்,
இரண்டாவது முறையாக போட்டியிட்டுள்ள மதியழகன் அவர்களுக்கு ஆதரவாக காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தேமுதிக கட்சியின் ஒன்றிய செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரிசெட்டிஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது வேட்பாளர் மதியழகனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கூடியிருந்த கிராம மக்களிடம் தமிழக அரசின் கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வருகின்ற மே மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தவுடன் மகளீர் உரிமை தொகை இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும், இதோடு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூப்பன் மூலமாக ரூ 8000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து பெற்றிட அனைவரும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அப்போது தேமுதிக மாவட்ட செயலாளர் சின்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவகுமார், சரவணன், கிளைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமார், சுரேஷ் மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்த முருகன், செந்தில்குமார், அருண் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக ஒன்றிய கழகச் செயலாளர் மகேததிரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகமாக்கலத்துக் கொண்டு வெற்றிக்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பனியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
