காந்தியடிகளின் 157- வது பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!
கிருஷ்ணகிரி

காந்தியடிகளின் 157- வது பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடை வாங்கி கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் அரசு அளித்துள்ள தள்ளுபடியினை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ