தென்காசி ஷீரடி வைத்திய சாயி பாபா கோவிலில், பாபாவின் 107 வது சமாதி தினம் .!
தென்காசி

தென்காசி ஷீரடி வைத்திய சாயி பாபா கோவிலில், பாபாவின் 107 வது சமாதி தினம்
தென்காசி அக் 03
தென்காசி களக்கோடி தெரு, மங்கம்மா சாலையில் அமைந்துள்ள, ஷீரடி வைத்திய சாயி பாபா திருக்கோவிலில் விஜயதசமி தினமான நேற்று பாபாவின் 107 வது சமாதி தினத்தை முன்னிட்டு, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பாபாவிற்கு பக்தர்கள் தாங்களாகவே பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ஆரத்தி பூஜையும், பாபா மகா சமாதி அடைந்த நேரமான மதியம் 2.30 மணிக்கு மகா சமாதி மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இந் நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மோட்ச தீபம் ஏற்றி பாபாவை வழிபட்டனர்.
விஜயதசமி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதல் முதலில் கல்வியை தொடங்கும்
வித்யாரம்பம் வழிபாடும் நடை பெற்றது.
இதில் நெல் மணியில் அ என்று எழுத வைத்து குழந்தைகளுக்கு கற்றலை பெற்றோர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர்கள் அறிவழகன், சியாமளா, மற்றும் கோவில் பணியாளர்கள் சங்கர்,சுடலை, இசக்கிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்