காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களை கைது செய்த காவல் துறையினர்.!
சிறுமுகை

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை தடை அமல்படுத்தப்பட்ட நிலையில் சிறுமுகையை சுற்றியுள்ள வெள்ளிக்குப்பம்பாளையம், முடுக்கன்துறை, பொகலூர், இரும்பொறை ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த முடுக்கண் துறை பகுதியைச் சேர்ந்த அழகிரி, பொகலூரைச் சேர்ந்த செந்தில்குமார், வெள்ளி குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரை, இரும்பொறையைச் சேர்ந்த அவிநாசி ஆகியோரை கைது செய்தனர் சிறுமுகை காவல்துறையினர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 45 மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.