லிட்டில் ஹார்ட்ஸ் மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.!
கிருஷ்ணகிரி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி லிட்டில் ஹார்ட்ஸ் மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள், 40 நபர்களுக்கு ஸ்வெட்டர், மதிய உணவு பிரியாணி வழங்கினார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
