பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்.!
கிருஷ்ணகிரி
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் அசோகன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த இவர், இரண்டு முறை பர்கூர் சட்ட மன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஒரு முறை சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார்.

தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளராக உள்ள இவர் அண்மைக் காலமாக பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டினால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசோகன், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தவெக கட்சியின் செயலாளர் முரளி விஜய் தலைமையில் தவெக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியில் புதியதாக இணைந்த அசோகனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு உடனடியாக தவெக கட்சி உறுப்பினர் அடையாள அட்டையினையும் செங்கோட்டையன் வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
