அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 60-ஆம் ஆண்டு வைர விழா  மற்றும் குடியரசு தின விழா.!

கிருஷ்ணகிரி

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 60-ஆம் ஆண்டு வைர விழா  மற்றும் குடியரசு தின விழா.!

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 60-ஆம் ஆண்டு வைர விழா  மற்றும் குடியரசு தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், அஞ்சூர்  ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா, குடியரசு தின விழா  மற்றும் பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில், தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்புரையில், பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் சி. கண்ணயன், துணை செயலாளர் வேலு, பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா, துணைத்தலைவர் அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு  மாவட்ட கல்வி அலுவலர் பா. கௌசர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ராஜதுரை, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ், நாஜீம்அலி, மசாயர் அலி, பன்னீர்செல்வம், கார்த்திகேயன், சர்தார், லட்சுமி பிரியா தேவராஜ், நவாப், காமராஜ், சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கேடையும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். 

முன்னாள் தலைமை ஆசிரியர்கள் லியோனி, சூசிநாதன், ஆசிரியர் சுப்பிரமணி, நெடுமாறன், ஆசிரியை சுகுணா, கார்த்திகேயன், பெரியசாமி, கோவிந்தன், ஆசிரியர் செல்வநாதன், பெருமாள், வி. ராஜேந்திரன், வெங்கடேசன், பெற்றோர்கள் உள்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ