ரைஸ் மில்லை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.!

கிருஷ்ணகிரி

ரைஸ் மில்லை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள மல்லிநாயணப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் இயங்கும் மாடர்ன் ரைஸ் மில்லால் மக்கள் ஆஸ்த்துமா உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் அவதி. ரைஸ் மில்லை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த குடியிப்பு பகுதியில்  மாடர்ன் ரைஸ் மில் இயங்கி வருகிறது.

வட மாநில தொழிலாளிகளைக் கொண்டு இயங்கி வரும்  இந்த இந்த ரைஸ் மில்லில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது அருகில் உள்ள பட்டா நிலத்திலும், மேய்ச்சல் நிலத்திற்கும் செல்வதால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் தேங்குவதால் குடிநீர் நிறமும் மாறி தூர்நாற்றம் வீசுவதால் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த தண்ணீரை குடித்தால் உடலில் அரிப்பும், குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும்  உடல் ஒவ்வாமை ஏற்படுகிறது,

மேலும் ரைஸ் மில்லில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் புகையால் மூச்சு திணறல் போன்ற பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுவதால் இந்த ரைஸ் மில்லை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் லாரிகளை ரைஸ் மில்லுக்குள் விடாமல் நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் இயங்கும் இந்த ரைஸ்மில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள நிலங்களில் விடுவதால் நிலத்தடித் தண்ணீர் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது,

ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரும் நிறம் மாறி குடிக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் குடியிருப்பு பகுதியில் இயங்கும் இந்த ரைஸ் மில்லை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ