ஊத்தங்கரை தனி சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மனு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனி சட்ட மன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தனது விருப்ப மனுவினை மாநில பொதுச் செயலாளர் வாசு அவர்களிடம் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி வழங்கினார்..
தமிழகத்தில் வருகின்ற மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்த சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை வழங்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பொருந்தகை ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனி சட்ட சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டி வாய்ப்பு கேட்டு கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வாசு அவர்களிடம் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.
இதே போல கிருஷ்ணகிரி மாவட்ட கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அக, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறுபாண்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஜாவித்ஹான் ஆகியோரும் கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு போட்டியிட வேண்டி தங்களது விருப்ப மனுவினை மாநில பொதுசெயலாளர் வாசு அவர்களிடம் கொடுத்தனர்.
அப்போது மீனவரணி மாவட்ட தலைவர் செல்வம், நகர பொறுப்பாளர் ஸ்ரீராம் மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
