ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏராளமான பள்ளி, மாணவ, மாணவிகள் உருவாக்கிய புதிய படைப்புகளை எழுத்தாளர் பென்னேஸ்வரன் அவர்கள் துவக்கிவைத்து படைப்புகளை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் அருகிலுள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.
பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதாராணி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை எழுத்தாளார் பென்னேஸ்வரன், திரைப்பட கலைஞர் சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் உருவாக்கிய அரியவகை அறிவியல் படைப்புகளை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டதோடு படைப்புகளின் சிறப்புகளையும் கேட்டறிந்தனர்.
பின்னர் மாணவ, மாணவிகள் இயற்கை பேரிடர் காலங்களில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது, இயற்கையான விவசாயம் மூலம் தரமான உணவு தானியம் உற்பத்தி செய்வது, சூரிய வெளிச்சம் மூலம் மின்சாரம் தயாரித்தல், எரிமலை எவ்வாறு உருவாகிறது, மனிதன் உயிர் வாழ என்ன செய்ய வேண்டும், சாலை விபத்துக்களை தவிற்க கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதனால் மண்ணிற்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மாணவ மாணவிகள் உருவாக்கிய இந்த படைப்புகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புத்தக கண்காட்சியும் நடைபெற்றது,
இதில் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் இந்த அறிவியல் கண்காட்சியின் போது அழகுற காட்சிப்படுத்தபட்டிருந்தது,
பள்ளியின் தாளாளர் மகேந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர்
ஜெசித்தா முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
அறிவியல் கண்காட்சியை பள்ளி ஆசிரியர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ