வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து மாவட்ட ஆட்சியருடன் கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் .!

கிருஷ்ணகிரி

வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து மாவட்ட ஆட்சியருடன் கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் .!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து மாவட்ட ஆட்சியருடன் கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியான மூன்றாவது நிகழ்வு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில்  நடைபெற்றது.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  ஒருங்கிணைப்பு தமிழ்செல்வன் அவர்கள் ‘‘கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் காட்டும் வாழ்வியலும் வரலாறும்’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுகற்களின் வகைகள் நவகண்டம், ஆநிரை கவர்தல், மீட்டல் நடுகல்,  புலிக் குத்திப்பட்டான் கல்,  யானைக் குத்திப்பட்டான் கல், பன்றி குந்திப்பட்டான் கல், பாம்புக்குத்திப்பட்டான் கல் மற்றும் வீரர்கள் நடுகற்கள் அதில் உள்ள கல்வெட்டுகள் கூறும்  காலம், அரசர்களின் எல்லைப்பகுதி, அவர்களின் காலம் இவற்றினை அறிந்து கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது.

அந்த கால மக்களின் உடை, ஆபரணங்கள், ஆயுதங்களின் வகைகள் மற்றும் ஏறுதழுவுதல் நடுகற்கள்,  அக்காலத்தில் இருந்து உடன்கட்டை ஏறும் வழக்கத்தினை உறுதிபடுத்தும்  பீமாண்டப்பள்ளி நடுகல்,  அதியமானோடு போரிட்டு உயிர்துறந்த  தொகரப்பள்ளி நடுகற்கள், இன்று வரை தொடர்ச்சியாக மார்கழி 27அன்று நடுகற்களை தொடர்ந்து வழிபடும்  முறை, இந்த நடுகற்களை இன்றும் குல தெய்வமாக வழிபடும் வழக்கங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்வதர்கான நடுகல் ஆதாரங்களான, சாக்கியம்மாள், சிலைகாரப்பன், வேடியப்பன், குந்தியம்மாள் இவைகளும் விளக்கப்பட்டன, 

கல்வெட்டுகளில் காணப்படும்  வட்டெழுத்து முதல் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்தமைதி பற்றியும்  அவற்றினை படி எடுப்பது பற்றியும் மாணவிகளுக்கு செய்து காட்டப்பட்டது, 

இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மகளீர் மேநிலைப்பள்ளி நாட்டுநலப் பணித்திட்ட மாணவிகள், ஆசிரியைகள் அம்பிகா, ஜெயந்தி மற்றும் அருங்காட்சிய காப்பாச்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வுக்குழுவின் பாலாஜி, மாருதி மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பணியாளர் பெருமாள் மேற்கொண்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ