டிப்பர் லாரி இடித்ததில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி, பொதுமக்கள் சாலை மறியல். !

கிருஷ்ணகிரி

டிப்பர் லாரி இடித்ததில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி,  பொதுமக்கள் சாலை மறியல். !

சூளகிரி அருகே அதிகவேகமாக இயக்கப்பட்ட டிப்பர் லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் சம்பவ இடத்தில் பலி: கிரஷர் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படி என்னுமிடத்தில் பெரிய சப்படியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, கிரஷர் லாரி ஒன்று அதிவேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அஜித்குமார் (27) என்கிற இளைஞர் தலை மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முரளி, முனுசாமி என்கிற இருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சப்படியில் உள்ள கிரஷருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் வேகமாக இயக்கப்படுவதை பலமுறை கண்டித்தும் இதேநிலை தொடர்வதாக கிராம மக்கள் 100க்கும் அதிகமானோர்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..

செய்தியாளர் 

மாருதி மனோ