கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில்  தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில்  தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில்  தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சேலம் மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்பாலாஜி  கலந்துகொண்டு பேசும் போது......
 
2026-ல்  நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  திமுக அரசின்  ஏமாற்று வேலைகளையும், மக்களுக்கு இழைக்கும் துரோகத்தையும் தோலுரித்துக் காட்ட வேண்டும், மேலும் 2026 இல் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில்  மீண்டும் தமிழகத்தில் ஆட்சிஅமைக்க வேண்டும், அதற்கு நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ