ஒட்டுர் கிராமத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருவிழாவினையொட்டி மாபெரும் கன்று விடும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒட்டுர் கிராமத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருவிழாவினையொட்டி மாபெரும் கன்று விடும் விழாவில் 200 எருது பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓட்டுர் கிராமத்தில் எழுத்தருளியுள்ள ஶ்ரீ ஆஞ்சநேயர் திருவிழாவினையொட்டி மாபெரும் கன்றுவிடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றிருந்தன.

அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து கன்றுகளுக்கும், எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில்100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளருக்கு பரிசுதொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது,

இந்த எருது விடும்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட கன்று, எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். இந்த எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகளள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஊர் கவுண்டர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
