ஹஸ்ரத் சையத் பாஷா தர்காவில் ஹஸ்ரத் மௌலா அலியின் பிறந்த நாளினை முன்னிட்டு சிறப்பு தூவா  நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

ஹஸ்ரத் சையத் பாஷா தர்காவில் ஹஸ்ரத் மௌலா அலியின் பிறந்த நாளினை முன்னிட்டு சிறப்பு தூவா  நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி அருகே சுமார் 450 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற சங்கல் தோப்பு ஹஸ்ரத் சையத் பாஷா தர்காவில் ஹஸ்ரத் மௌலா அலியின் பிறந்த நாளினை முன்னிட்டு சிறப்பு தூவா  நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் சுமார் 450 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற சங்கல் தோப்பு ஹஸ்ரத் சையத் பாஷா தர்காவில் ஹஸ்ரத் மௌலா அலி அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சிறப்பு துவா மேற்கொள்ளப்பட்டது. இதன் முன்னதாக சங்கல் தோப்பு ஹஸ்ரத் சையத் பாஷா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் துவா நடைபெற்றது.

இதனைத்தொடர்த்து தர்காக்கள் பேரியக்கம் மாநில தலைவர் ஆசாத் காதிரி தலைமையில் ஹஸ்ரத் மௌலா அலி அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் கொடி மரத்தில் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பு துவா மேற்கொண்டார்

இந்த சிறப்பு துவாவின் போது உலக மக்கள் யாவரும் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்திட வேண்டியும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த விழாவிற்கு சௌகத் மஜித் தலைவரும் தர்கா கமிட்டி செயலாளருமான கவுஸ் ஷெரிப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவின்போது தர்காக்கள் பேரியக்கத்தின் மாநிலச் செயலாளர் உம்மர் பாஷா, நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் பேரியக்கத்தின் நிர்வாகிகளான அஷ்ரப், ஜியாமுகமத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ