திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை
கிருஷ்ணகிரி
திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை
தர்மபுரி மாவட்டம், மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கல்வி துறையில் இருந்து தொழில்துறைக்கு என்னும் பொருண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் பிரபு வரவேற்புரை வழங்கினார்.
முதல்வர் முனைவர் சு. செல்வகுமார் அவர்கள் இப்பயிற்சியின் மூலம் மாணாக்கர்களின் தங்களுக்கென்று துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறந்த தொழில் முனைவோராக வரவேண்டும் என்றும், தொழில்துறை சார்ந்த திறமைகளை கற்றுக்கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

ஜே சி ஆர் கே முகமது கிஃயாபத்துல்லா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் சேலம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செயல்முறை சார்ந்த கற்றல் வாயிலாக எவ்வாறு தொழில்துறையில் லாபம் பெற்று வாழ்வில் முன்னேறுவது குறித்தும், நமக்கு யார் போட்டியாக இருப்பவர்கள் அவர்கள் முன் நாம் எவ்வாறு திறமைகளை கற்று வெற்றியடைவது என்பதைப் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சி பார்த்திபன் டெக்சி கியூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்று கூறி மாணாக்கர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், இணைச்செயலாளர் ஹரி சங்கர்,தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் திருமதி ரேவதி இளங்கோவன், செயல் அலுவலர் முனைவர் கருப்பண்ணன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், மற்றும் அனைத்து துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் நிறைவாக காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவியல் மற்றும் தரவு அறிவியல், கணினி பயன்பாட்டு துறை தலைவர் திருமதி பிரபா தேவி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
